எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

வேட்பு மனுத்தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

திருந்த மாட்டார்கள்

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்த மாட்டார்கள் என்றும் மூர்க்கத்தனமாகத்தான் இருப்பேன் என்று இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி எதிர்ப்பு அலை பாயும் எனக் கூறிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்க எடப்பாடியே காரணம் எனவும் குற்றம்சாட்டினார். பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பறிக்க நினைக்கிறார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். முன்னதாக பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here