பிரபல மலையாள நடிகரான இன்னசென்ட் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

750 படங்கள்

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் 1972 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா படத்தில் இவர் நடித்திருந்தார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய இவர், சுமார் 750 படங்களுக்கு மேல் காமெடியனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தீவிர சிகிச்சை

நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் வெற்றி பெற்றவர் இன்னசென்ட். 2012 ஆம் ஆண்டு தொண்டைப்புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று, அதன்பிறகு குணமடைந்த இவர் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னசென்ட்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here