கிரிக்கெட் வீரர் சுப்மன் கீலும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவருகின்றன.

தெலுங்கில் முன்னணி

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா.

ஒரே கிரிஷ்

சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கீலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளி வருகின்றன. சமீபத்தில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்தார். அதேபோல் சுப்மன் கீலும் தனக்கு ராஷ்மிகா மீது கிரஷ் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் இருவரும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாகவே கன்னட நடிகர் ரக்ஷித் செட்டியை ராஷ்மிகா காதலித்து 2017 ஆம் ஆண்டு இவர்களுக்குள் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here