சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று திறந்து வைத்தார்.

புதிய கேலரி

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 31,140 இறக்கைகளுடன் புதிதாக 5,306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுளள்து. இந்த மைதானத்தில் மொத்தமாக 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வகையில் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது. இனி 36,446 பேர் சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து போட்டியை காணலாம். 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தம் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்தமிடமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேலரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இண்று திறந்து வைத்தார். மேலும் புதிய கேலரிக்கு கலைஞர் கருணாநிதி பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டினார்.

வீரர்கள் பங்கேற்பு

முதல் தள உள்ளரங்கில் நவீன வசதிகளுடன் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சீல் வைக்கப்பட்ட 3 கேலரிகளை மீண்டும் திறக்க 2020-ல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதல்முறையாக I,J,K கேலரிகளில் 22-ம் தேதி இந்தியா -ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியை ரசிகர்கள் பார்க்கவுள்ளனர். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here