நடிகை எமி ஜாக்சன் மகனுடன் விளையாடும் புகைப்படம் பலரின் கவனம் பெற்று வருவதுடன், அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

துரையம்மாள்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தற்போது ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மதராசபட்டினம் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது. தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

வளர்ந்துவிட்ட மகன்

2015 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் என்பவுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த எமி ஜாக்சன் தற்போது எட் வெஸ்ட்விக் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருந்த சமயத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், குழந்தை பிறப்புக்கு பிறகும் தன் மகனுடன் விளையாடும், வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எமி ஜாக்சன் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here