இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” படத்தில் நடிகைகள் சிம்ரன், லைலா இணைந்துள்ளனர்.

இணைந்த சிம்ரன்

தமிழ் திரையுலகில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் சிம்ரன், லைலா. இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில் இணைத்துள்ளனர். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெற்றி கூட்டணி

முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை லஷ்மி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைலாவும், சிம்ரனும் பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் இருக்கின்றனர். இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஈரம் படத்தின் வெற்றிக் கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் தன் புதிய பயணத்தை துவங்கியுள்ள இயக்குநர் அறிவழகன். சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here