டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிகர் கவின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இனி வெற்றி தான்

சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடரின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய நடிகர் கவின், பிக் பாஸ் சீசன் 3 இல் கண்டஸ்டன்ட்டாக பங்கேற்ற பிறகு பலரின் கவனத்தையும் பெற்றார். “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கவின், லிப்ட் படத்தின் மூலம் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கமிட்டான கவின்

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நடிகர் கவின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சதீஷ் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இதுவாக இருக்கும். மேலும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ‘ஊர் குருவி’ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் கவின். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here