பீஸ்ட் பட பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கித்தார் வாசித்து டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

பீஸ்ட் வைப்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஜாலியோ ஜிம்கானா பாடலை நடிகர் விஜய் பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்தப் பாட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கொண்டாடும் ரசிகர்கள்

14 ஆவது சீசனுக்காக ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். வரும் 31ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரண்டு அணியினரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டா பக்கத்தில் விஜயின் பீஸ்ட் பட பாடலுக்கு தோனி உட்பட 4 விளையாட்டு வீரர்கள் நடனம் ஆடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்களும், தோனி ரசிகர்களும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here