கல்யாணம் முதல் காதல் வரை, யாரடி நீ மோகினி, கயல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, AK62 படத்தில் இணைந்துள்ளார்.

மிகுந்த ஆவல்

அஜித்தின் 62வது படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி அப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய அஜித் குமார் படத்தின் தகவல்கள் எது வந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். மேலும் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் வெறித்தனமாக ரசிகர்கள் ஷேர் செய்து வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் அஜித் 62 படத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள அஜித் 62வது படத்தை, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் சில காரணங்களால் அப்போது கைவிடப்பட்டது. தற்போது அஜித்தின் 62வது படத்தை தடம், கலகத் தலைவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணைந்த நடிகை

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக திட்டமிட்டுள்ள AK 62 படத்தின் கதை முழுவதுமாக தயாராகிவிட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். அது மட்டுமில்லாமல் தற்போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டவுடன் இப்படத்தின் முழுமையான அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, AK 62 படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோருக்கு நன்றி கூறி படத்தில் இணைந்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். டிவி தொடர்களில் நடிக்கும்பொழுதே இவருக்கென்று பல ரசிகர்கள் இருந்த நிலையில், இவர் இந்த படத்தில் இணைந்திருப்பது சீரியல் ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. AK 62 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் முழு லிஸ்ட் விரைவில் அடுத்தகட்ட அப்டேட்டுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here