காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கோஸ்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

சிரிப்பு போலீஸ்

2016 ஆம் ஆண்டு “கதை சொல்லப் போறோம்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கல்யாண். அதன்பிறகு குலேபகாவலி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பிறகு காத்தாடி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் அவர். தற்போது கல்யாண் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோஸ்டி. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.

காமெடி பேய் படம்

கோஸ்டி படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், தேவதர்ஷினி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காமெடி கலந்த பேய் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், காமெடி போலீசாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். இந்த படம் வருகின்ற 17ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ளது. காமெடி காட்சி நிறைந்துள்ள இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here