ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

வசூல் வேட்டை

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருந்த பதான் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வெளிவந்த இந்த திரைப்படம் என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி இத்தனை மாதங்கள் கழித்தும் இப்படத்திற்கான வைப்ஸ் குறைவில்லை.

வெளிவந்த தகவல்

ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தற்போது ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பதான் திரைப்படம் 800 திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வசூலை பெற்றிருப்பதனால், ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் என்பதாலும், ஷாருக்கான் ஹீரோ என்பதாலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் ஜவான் திரைப்படமும் வசூல் வேட்டையை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பதான் திரைப்படம் எப்போது OTTயில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here