நடிகை கௌதமியும் அவரது மகளும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெற்றி நாயகி

1988 ஆம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை கௌதமி, எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். 80களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த கௌதமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராமராஜன், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நடிகை கௌதமி 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த வருடமே அவரை விவாகரத்தும் செய்தார். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அக்கா தங்கை

கடைசியாக தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்திருந்தார் கெளதமி. நடிகர் கமல்ஹாசனும், கௌதமியும் லிவிங் டுகதரில் 10 வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கௌதமி தற்போது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன் வசித்து வருகிறார். கௌதமியின் மகள் சுப்புலட்சுமி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வருவார். அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பார்ப்பதற்கு அக்கா தங்கை போல் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here