விமானத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் பிரபலம்

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியின் பிக் பிக் பாஸில் பங்கேற்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நடிகை ரம்யா பாண்டியன். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த படத்தை, சூர்யா ஜோதிகா நிறுவனமான 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துடன், ரம்யா பாண்டியரின் நடிப்பும் பெருமளவு பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

வைரல் பதிவு

சமீபத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜாவை விமானத்தில் சந்தித்த ரம்யா பாண்டியன், அவருடன் பகிர்ந்த பல விஷயங்களையும், அனுபவத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய சினிமாவின் பெருமையான பாரதிராஜா சாருடன் பயணம் செய்ய நேர்ந்தது எனக்குப் பெருமையான விஷயம். ஒரு குழந்தைக்கு எப்போதும் நிறைய கேள்விகள் இருக்கும். அதற்கு பதில் சொல்வதற்குப் பெரியவர்களிடம் எப்போதுமே பதில் இருக்கும். பாரதிராஜா சார் எப்போதுமே ஒரு லெஜெண்ட். ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்தும் உடனடியாக அவர் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளது இந்த கலை மீது அவர் வைத்துள்ள மரியாதையைக் காட்டுகிறது. சினிமா மீது அவர் வைத்துள்ள காதலும், அன்பும் அவர் மீதான மரியாதையை மேலும் கூட்டுகிறது. மதிப்புமிக்க உரையாடலாக அமைந்தது. உங்களின் பல தகவல்களுக்கும் அன்பான ஆசீர்வாதத்திற்கும் நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் இணையத்தளத்தில் வைரலாக பரவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here