பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாக்கியாவின் மாமனார் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

கதையில் ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இது பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்கியா. அடிக்கடி பல ட்விஸ்ட்களை கொடுத்து வரும் இந்த சீரியல், தற்போதும் ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை எதிர்நோக்கி நகர்கிறது.

சப்போர்ட் செய்யும் மாமனார்

ராதிகா வேலை செய்யும் கம்பெனியின் கேன்டீன் ஆர்டரை பாக்யா பெறுகிறார். ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்தது மட்டும் இல்லாமல், பாக்யாவின் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார். அதன்பிறகு பாக்கியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் கோபிக்கு அடுத்தடுத்து வாழ்க்கையில் அடி மேல் அடி விழுகிறது. பாக்கியாவின் இளைய மகன் எழில் மற்றும் மூத்த மருமகள் ஜெனி மற்றும் வீடு வேலை செய்யும் செல்வி துணையோடு பாக்கியா பல சாதனைகளை செய்து வருகிறார். பாக்கியாவிற்கு அவரது இளைய மகன் எழில் மூத்த மருமகள் ஜெனி என்று ஒரு பக்கம் சப்போர்ட் செய்ய அவருக்கு பக்க பலமாக அவரது மாமனார் ராமமூர்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பாக்கியாவிற்கு ஃபுல் சப்போர்ட் செய்யும் அவரது மாமனார் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மாமனாராக நடிக்கும் டிஎஸ்பி ரோசாரியின் குடும்ப புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகின.

சிறப்பு தோற்றங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி ரோசாரி பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ராஜா மகன், அமைதிப்படை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனுஷுடன் பொல்லாதவன், சிம்புவுடன் தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் டிஎஸ்பி ரோசாரி. சீரியல்களில் பாசிட்டிவ் ரோல்களில் நடித்து வரும் இவர் பாக்கியலட்சுமி தொடரில் பேசும் பல டயலாக்குகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் மற்றொரு சூப்பர் ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முல்லை என்ற கதாபாத்திரத்தின் அப்பாவாக டிஎஸ்பி ரோசாரி நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here