நடிகை சமந்தா கல்லூரியில் படிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

கனவுக்கன்னி

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் நடிகை சமந்தா அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் தேவ் மோகனுடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக உடல் நலத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சமந்தா, தற்போது மெல்ல மெல்ல தேறி வருகிறார். தீவிரமான உடற்பயிற்சி செய்தும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பல மொழிகளில் மில்லியன் கணக்கில் ரசிகர்களை வைத்து இருப்பவர் சமந்தா.

கல்லூரி புகைப்படம்

எப்பொழுதும் தங்களது கனவு கன்னியான நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையும், அவர்களது புகைப்படங்களையும் சேகரித்து வருவது ரசிகர்களின் வழக்கம். அதேபோல் தான் சமந்தாவின் புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். நடிகை சமந்தா கல்லூரி படிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சமந்தாவின் ரசிகர்கள் இவரது குழந்தை பருவ புகைப்படங்களையும், காலேஜ் புகைப்படங்களையும் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here