நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்சி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தசராவில் பூர்ணா

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் பூர்ணா. இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். பூர்ணா தற்போது நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் தசரா படத்தில் நடித்துள்ளார்.

அழகிய புகைப்படங்கள்

சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலி என்பவரை நடிகை பூர்ணா காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்திய அவர், கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது ஏழு மாத கர்ப்பிணியான பூர்ணாவுக்கு சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் இஸ்லாமிய முறைப்படி வேட்டி கட்சி வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here