இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னின் செல்வன் 2 படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இணைந்த நட்சத்திரங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 1. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் உருவான இப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. கல்கியின் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வசூல் வேட்டை

PS 1 கிட்டத்தட்ட ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் இயக்குநர் மணிரத்னம் படு பிஸியாக இருந்து வருகிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் படப்பிடிப்பு குறித்து பேசும் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிளிம்ஸ் ஆஃப் பி எஸ் 2

தயாரிப்பு நிறுவனம் இந்த வீடியோவிற்கு டைனி கிளிம்ஸ் ஆஃப் பி எஸ் 2 (Tiny Glimpse Of PS 2) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. பொன்னின் செல்வன் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. கண்டிப்பாக இந்த படமும் முதல் பாகத்தைப் போலவே வசூல் வேட்டை நடத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here