நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

சிவகார்த்திகேயன் ஜோடி

கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருந்தார். தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் அதே ஆண்டு ஸ்பைடர் திரைப்படம் பைலிங்குவல் திரைப்படமாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. ஸ்பைடர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கார்த்திக்கின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தேவதையான ரகுல்

தெலுங்கு, தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் தமிழில் இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

க்யூட் புகைப்படம்

உடற்பயிற்சி, யோகா செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருவார். எப்போது தனது கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு, இணையத்தில் பரபரப்பை கூட்டி வரும் ரகுல் பிரீத் சிங், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தங்க நிற உடையில் அளவான கவர்ச்சியில் க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here