தனக்கு திருமணம் என்று பரவும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

அறிமுக நாயகி

கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருந்தார். தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் அதே ஆண்டு ஸ்பைடர் திரைப்படம் பைலிங்குவல் திரைப்படமாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. ஸ்பைடர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்தார். எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கார்த்திக்கின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எதிர்பார்க்கும் படங்கள்

தெலுங்கு, தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். மிகவும் பிஸியாக இந்தியன் 2, அயலான் போன்ற படத்தில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் முக்கியமான ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு திருமணமா?

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங்குக்கு திருமணம் நடக்கப் போவதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ரகுல், “எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் பேசுகிறார்கள். எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? ஒவ்வொரு வாரமும் என்னை பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்துவிட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்க வேண்டும் என நினைக்கிறேன். என் திருமணம் குறித்து வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை” என்று கூறி தன்னை பற்றி வெளிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here