விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை நடிகை சாய் பல்லவி மறுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

கவர்ச்சிக்கு நோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்குளுடன் இணைந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரது ரவுடி பேபி பாடல் இன்றும் யூடியூப் டிண்டாகவே இருந்து வருகிறது. அதிக மேக்கப் இல்லாமல் நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் பல்லவி, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதுவும் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு நோ

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படி பிசியாக இருந்து வரும் நடிகை சாய் பல்லவிக்கு விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் சாய்பல்லவியை அணுகியதாகவும், அவர் ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததால் மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் விஜயின் ரசிகையாக இந்த படத்தில் நான் நடித்தேன் என்று அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கும் நோ

அதேபோல் அஜித்தின் வலிமை படத்திற்கும் முதலில் சாய்பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகின்றனர். ஹீரோயினுக்கு முக்கியமான ரோல் இல்லாததால் மறுத்ததாகவும் கூறுகின்றனர். சான்ஸ் கிடைத்தால் போதும் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை நடிகை சாய் பல்லவி தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் நோ சொன்ன தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here