தனது சகோதரருடன் நடிகை இவானா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

சூப்பர் ஹிட்

நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு வருடங்களுக்காக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த இவானாவுக்கு, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

வைரல் புகைப்படம்

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையையும் phanton ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஹீரோயினாக நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் ஆனதும் இவானாவின் மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டராக இருக்க கூடிய நடிகை இவானா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்வின் சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here