அருவியில் குளித்து ஆட்டம் போட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

பிளாக்பஸ்டர் ஹிட்

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், அந்த படத்தினால் பல சர்ச்சைகளை சந்தித்தார். அதன்பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த்துடன் நடித்த மைனா திரைப்படம், அவருக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் பிஸியாக இருந்த அமலாபால் தலைவா, தெய்வத்திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என்று இவரது பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டும் பெற்றது. ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

விவாகரத்து

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதன்பிறகு இவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் அமையாததால் இவரே சில படங்களை தயாரித்து நடித்து வந்தார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் வித்தியாசமான படமாக அமைந்தது.

அருவியில் ஆட்டம்

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அமலா பால், கோவில் கோவிலாக சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது சுற்றுலா தளத்திற்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அருவியில் நீச்சல் போடும் புகைப்படங்களையும், மழையில் நனைந்து ஆட்டம் போடும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அமலா பால். நீல நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் பல லைக்குகளை அள்ளி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here