சிறந்த பெஸ்ட் ஸ்டண்ட் கேட்டகிரியில் RRR படத்துக்கு விருது கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

தொடர்ந்து சாதனை

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமௌலி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான RRR திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரூ.1200 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததுடன், தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

குவியும் விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 6-வது ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது வழங்கும் விழாவில், சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருது RRR படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக் கொண்டார் . பெஸ்ட் ஸ்டண்ட் கேட்டகிரியில் ஹச்சிஏ 2023 விருது வென்ற RRR பட இயக்குநர் ராஜமௌலி, தன்னுடன் பணியாற்றிய தனது டீமுக்கு நன்றியும் தெரிவித்தார். நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியிருக்கும் நன்றி தெரிவித்த ராஜமௌலி, இறுதியாக ஜெய்ஹிந்த் கூறி தனது உரையை முடித்தார்.

குவியும் விருது

ஏற்கனவே கிரிடிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விழாவில் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தது RRR திரைப்படம். அதாவது சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை வென்றது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் கீரவாணி பெற்றார். அடுத்தடுத்து பல விருதுகளை குவித்து வரும் இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதையும் வெல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here