ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி கொண்டிருக்கின்றது.

அதிக எதிர்பார்ப்பு

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜெயிலர் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

வீடியோ வைரல்

ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. தற்போது மங்களூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்றை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here