நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்தில் இடம்பெறுள்ள கண்ணிலே பாடல் இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலக அழகியுடன் பிரசாந்த்

1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் பிரசாந்த். ஆரம்ப காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று அணைத்து மொழியிலும் நடித்து வந்தார். திருடா திருடா திரைப்படம் கொடுத்த வெற்றி, அடுத்தடுத்து தமிழிலேயே பல பட வாய்ப்புகள் இவருக்கு அமைந்தது. ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, குட் லக், பார்த்தேன் ரசித்தேன் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை பிரசாந்த் கொடுத்தார்.

வெற்றி வேண்டும்

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். சமீப காலமாக அவர் நடித்து வந்த பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால், பிரசாந்த் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஹிந்தியில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த அந்தாதூன் படத்தின் ரீமேக் உரிமையை, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றார். இயக்குநர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற பெயரில் பிரசாந்த் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் பிரசாத்துடன் இணைந்து சிம்ரன், வனிதா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரகனி, பிரியா ஆனந்த் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஹிந்தி ரீமேக்

அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே என்ற பாடலை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் யூட்யூபில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. ஆதித்யா ஆர்கே. பாடியுள்ள இந்த பாடலை, உமாதேவி எழுதியுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்காக பிரசாந்த் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான அந்தாதூன் படத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here