பாகிஸ்தான் நடிகை ஹைனா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குவியும் விருதுகள்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான RRR திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததுடன், தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆறாவது ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது வழங்கும் விழாவில் சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருது RRR படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். RRR படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் கீரவாணி பெற்றார். இந்த பாடல் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

ஆட்டம் போட்ட நடிகை

அந்த வகையில், பாகிஸ்தான் நடிகை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹைனா அமீர். இவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹைனா அமீர், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார். பாகிஸ்தான் நடிகை நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வரை இந்த படமும், பாடலும் பிரபலமாகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here