மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கடுவா திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளது.

டாப் ஹீரோ

2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பிரித்விராஜ், 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத்தலைவன் போன்ற பல படங்களில் நடித்து தமிழிலும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்த பிரித்விராஜ், மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

தமிழில் கடுவா

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து சம்யுக்தா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான கடுவா தற்போது தமிழில் வெளியாக போவதாக தகவல் வந்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்த கருவா திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் சொல்லப்பட்டது. தற்போது கடுவா படைத்தபடைத்தை தமிழில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் 3ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று போஸ்டருடன் ரிலீஸ் செய்தியையும் அதிகாரப்பூர்வமாக படக் குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here