நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

டபுள் ட்ரீட்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் படமான வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது.

வெளியான வாரிசு

விஜயின் வாரிசு திரைப்படம் சென்டிமென்ட், ஆக்ஷன் திரைப்படமாக இருந்தது. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கியிருந்தார். வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்ததுடன், ஒட்டுமொத்தமாக ஒரு கலவையான விமர்சனங்களையும் பெற்றது. பல விமர்சனங்கள் வந்தாலும் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் கலெக்ஷனை இப்படம் பெற்றதாகவும் படக்குழுவினர் கூறியிருந்தனர்.

OTT ரிலீஸ்

வாரிசு படத்திற்கு இசையமைத்திருந்தார் தமன். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் ரஞ்சிதமே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இந்த படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மற்ற நாடுகளில் சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய தளங்களிலும் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here