தன் படத்தை இயக்கச் சொல்லி நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் போன் மூலம் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிஸியான லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி கொண்டு இருக்கின்றது. இந்த படத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அதை அடுத்து கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களை வரிசையில் வைத்துள்ளார்.

இயக்குநர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் அடுத்த படம் குறித்து லோகேஷிடம் ரஜினி போனில் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. அதை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். அதன்பிறகு ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.

கமல் படமா? ரஜினி படமா?

நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கவுள்ள படத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் லோகேஷிடம் அடுத்த படத்தை இயக்குவது குறித்து ரஜினி போனில் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது 2, விக்ரம் 2 என பிஸியாக இருக்கும் சமயத்தில், விக்ரம் 2 படத்தை கைவிட்டு ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவாரா லோகேஷ் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான சாதகமான முடிவில் லோகேஷ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் லோகேஷ் கனகராஜ் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here