கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா நேரில் சந்தித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது, உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நடிகர் சூர்யாவும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், சச்சினும் தமிழில் பதிவிட்டு வாழ்த்தியது அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

சூப்பர் அப்டேட்

சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சூர்யா, இப்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம், 10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சூர்யா, தற்போது சச்சினை சந்தித்து இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆகவே இருக்கிறது. சூர்யா 42 படத்திற்கான அப்டேட்டை கேட்டு வந்த ரசிகர்களுக்கு இப்படி ஒரு போட்டோவை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த பதிவுகளுக்கு சூர்யா ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here