தன்னுடைய கேரக்டரை தப்பாக பேசிய ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் புஷ்பா படத்தில் நடித்த அனுசுயா பரத்வாஜ்.

புஷ்பா பிரபலம்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. புஷ்பா படத்தில் அனுசுயா பரத்வாஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான அனுசுயா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவால் இன்னும் பிரபலமாகியுள்ளார்.

சர்ச்சை பதிவு

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுசுயா, சமீபத்தில் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், அனுசுயா பரத்வாஜ் பணத்துக்காக மட்டும் தான் திருமணம் செய்து கொண்டதாக கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்ட்டால் கடுப்பான அனுசியா, “பணத்தைத் தவிர நீ முதலில் சிந்திக்க கற்றுக்கொள். ஏன் என் கணவரிடம் மட்டும் தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா? இனி பேசினால் உன்னை செருப்பால் அடிப்பேன். உன்னுடைய எண்ணம் பணத்தில் மட்டும் தான் இருக்கிறது. உன்னைப் போன்று அனைவரும் இருக்க மாட்டார்கள் முதலில் உன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here