ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மீண்டும் தொடக்கம்

1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்தன. பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் சங்கர். இந்தியன் 2 படத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில், தனது டீமை வேலை வாங்கும் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

வேலை வாங்கும் ஷங்கர்

இந்தியன் 2 படத்தின் வேலைகள் 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சூட்டிங் நடந்து கொண்டிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சின்கா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில், படத்தை எப்பொழுது திரையரங்கில் காண போகிறோம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படம் மட்டும் இல்லாமல் ராம்சரண் நடிக்கும் RC 15 படத்தையும் இயக்கி வருகிறார். RC 15 படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here