ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் நான்காம் பாகத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக மார்வல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

3 பாகங்கள் வெற்றி

மார்வல் சீரீஸ் படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஏராளம். டோபி மெக்வையர், ஆண்ட்ரூ கார்ஃபீல்டிற்கு பிறகு, புதிய ஸ்பைடர் மேனாக அறிமுகமானவர், டாம் ஹாலாண்ட். இவரது நடிப்பில் இதுவரை, ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங், ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் மற்றும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ஆகிய மூன்று படங்கள் மூன்று பாகங்களாக வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து ஸ்பைடர் மேன் படத்தில் நான்காவது பாகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மார்வல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைகள் தொடக்கம்

முதல் மூன்று பாகங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்த ஸ்பைடர் மேன், நான்காவது முறையாக ரசிகர்களை குஷிபடுத்த வர இருக்கிறார். மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் ஒரு பேட்டியில் ஸ்பைடர் மேன் நான்காம் பாகத்திற்கான கதை எழுதும் பணி தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் வந்ததும் மார்வல் ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர். மற்ற தகவல்களும் படத்தின் அப்டேட்டுகளை கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #spiderman4 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here