நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கில் அறிமுகம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வந்த நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். சார் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் மூலம் தெலுங்கு ஆடியன்சையும் அவர் தன் வசப்படுத்தியுள்ளார்.

கல்வி வியாபாரம்

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம், கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரிலீஸ் தேதி தள்ளி போன நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. கல்வியை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சமுத்திரகனியை, பள்ளி வாத்தியாரான தனுஷ் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் வாத்தி படத்தின் கதை.

வில்லன்

பல படங்களில் பள்ளி வாத்தியாராக வந்து அட்வைஸ் கொடுக்கும் சமுத்திரக்கனி, இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான நானே வருவேன் திரைப்படம் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. அதனால், இந்த படமாவது தனுஷுக்கு நல்ல பெயரை பெற்று தருமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கின்றனர். இவரது நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படமும் வெளிவர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here