சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் முதல் பாடல் இவரது பிறந்த நாள் பரிசாக நாளை வெளிவர உள்ளது.

கூடுதல் எதிர்பார்ப்பு

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடல் அவரின் பிறந்தநாள் பரிசாக நாளை வெளிவர உள்ளது. மாவீரன் படத்தை இயக்குகிறார் மடோன் அஸ்வின். ஏற்கனவே இவர் இயக்கிய மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து கொண்டிருக்கின்றது. மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இவரது இசையில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். எனவே இந்த படத்தின் பாடல் மீது மிகுந்த ஆர்வம் நிலவி வருகிறது. மண்டேலா படம் போல் மாவீரன் திரைப்படமும் அரசியல் சார்ந்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கோடை விடுமுறையில் இந்த படம் வெளிவர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மாவீரன் படத்தில் டைட்டில் அனென்ஸ்மென்ட் வீடியோ நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவும் ஆர்வம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், மாவீரன் திரைப்படம் மீது ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் திரைப்படமும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் உள்ளது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். நாளை வெளியாக இருக்கும் மாவீரன் படத்தின் பாடலுக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here