ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட லவ் டுடே திரைப்படம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் அப்பட்டத்தை இயக்கி நடித்திருந்த பிரதீப் ரங்கநானுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

முன்னணி இயக்குநர் பிரதீப்

2019 ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம், சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருந்து வந்த பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் லவ் டுடே படத்தை இயக்கினார்.

ஹீரோவாக அறிமுகம்

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். ஹீரோவாக இவரது நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். தற்போது லவ் டுடே படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டிலை வைத்து இந்த படமும் வெளியானதால் பலத்த வரவேற்பு இருந்தது. லவ் டுடே திரைப்படம் இன்றோடு 100 நாட்களைக் கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளது.

100 நாள் சாதனை

லவ் டுடே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரவி மற்றும் மாமா குட்டி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் குழந்தைகளுக்கு கூட பரிச்சயமாக மாறிவிட்டது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரீல்ஸ் ஆகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்று 100வது நாளை கடந்து இருக்கும் லவ் டுடே படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இவரின் அடுத்த வரவுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here