நடிகர் ஆர்யா – சாயிஷா மகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்புக்கு அங்கீகாரம்

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும், இவர் நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படம் தான் முதலில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் என்று பல படங்கள் நடித்துவிட்டார். இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் திரைப்படம் இவரது நடிப்புக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதேபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஆர்யா நடித்த மதராசபட்டினம் திரைப்படமும் அவரை முன்னணி நடிகராக நிலை நிறுத்தியது.

காதல் திருமணம்

2019 ஆம் ஆண்டு, நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. சாயிஷா காப்பான், டெடி போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு ஆரியானா என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஆரியானாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

புகைப்படங்கள் வைரல்

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சாயிஷா, எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தேவதை போல் இருக்கும் இவர்களது குழந்தையின் புகைப்படம் பல லைக்ஸ்களையும், ஹார்ட்டின்களையும் பெற்று வருகின்றது. சமீபத்தில் சாயிஷா வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here