லியோ படத்தின் கதை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அப்படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னை வித்தியாசமான ஆக்சன் தோற்றத்தில் காண்பிக்க ைருப்பதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

அதே கூட்டணி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் திரைப்படம் லியோ. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு, மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு காரணம் இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து லியோ படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டீசருக்கு பெரும் வரவேற்பு

லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் விமான மூலம் காஷ்மீர் சென்றனர். சமீபத்தில் லியோ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைக்கும் டைட்டில் டீசர் உருவான மேக்கிங் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், லியோ படத்தில் நடிகர் விஜய் உடன் நடிப்பது குறித்து ஆக்சன் கிங் அர்ஜுன் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

நம்பிக்கை இருக்கு

விஜய்யுடன் நடிப்பது குறித்து ஆக்சன் கிங் அர்ஜுன் கூறுகையில்; “லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்சன் தோற்றத்தில் காண்பிக்க போகிறார். மேலும் மிகப்பெரிய நடிகர் விஜய், அவருடன் நான் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும்” என்றார். அர்ஜுன் இப்படி கூறி இருப்பது படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here