திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற துணிவு திரைப்படம் Netflix OTT தளத்திலும் வெளியாகி உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

Netflix-ல் ரிலீஸ்

எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்குமார் நாயகனாக நடித்திருந்தித இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், பாவனி ரெட்டி, அமீர், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் படத்தில் இடம்பெற்று இருந்த பாடல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பொங்கல் அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ்சில் வெளியானது.

துணிவு முதல் இடம்

துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகளில் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதே போல் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது உலக அளவில் நெட்ப்ளிக்ஸ்ல் முதலிடம் பிடித்துள்ளது துணிவு திரைப்படம். அதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், இந்த படத்தையும் தயாரித்துள்ளார். ஒரு சில படங்கள் மட்டுமே நெட்ப்ளிக்ஸ் ரேட்டிங்கில் இடம் பெறும். தற்போது உலக அளவில் அஜித்தின் படம் முதலிடம் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் புதுப் படம்

அஜித் தற்போது நடிக்க போகும் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். அஜித் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதால் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here