அஜித் நடிக்கும் AK62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

OTTயில் வரவேற்பு

அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் Netflix-ல் வெளியான இந்த திரைப்படம் OTT தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அஜித் நடிக்கும் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறியிருந்தனர். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தானம் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியானது.

மாறிய இயக்குநர்

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் AK62 படத்திலிருந்து விலகிவிட்டார். இந்த படத்தில் இருந்து விலகிய உடன் விக்னேஷ் சிவன் AK62 இயக்குநர் என்ற ஹேஷ் டேக்கையும், அஜித்தின் போட்டோவையும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். தற்போது தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி AK62 படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

மாறிய இசையமைப்பாளர்

இயக்குநர் உறுதி செய்யப்பட்ட இந்த சமயத்தில், இசையமைப்பாளரும் மாறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அனிருத் இசையமைக்கப் போவதாக இருந்த AK62 திரைப்படம், தற்போது சந்தோஷ் நாராயணன் கைக்கு வந்துள்ளது. அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் மாறியதுடன் இசையமைப்பாளரும் மாறி இருப்பது பெரும் குழப்பத்தையே கொடுத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அஜித் படத்திற்கு முதல் முதலாக இசையமைக்க உள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்த தகவல்களை பார்த்த ரசிகர்கள் அனைத்து குழப்பங்களையும் சரி செய்துவிட்டு கரெக்டான அப்டேட் கொடுங்கள் என்று கெஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here