நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தின் பாடல் வெளியாகி இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஹீரோவான சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் சூரி. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். காமெடி நடிகராகவே இருந்தாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருப்பதுண்டு. அந்த வகையில் காமெடி நடிகர்களான சந்தானம், யோகி பாபு, வடிவேலு ஏற்கனவே ஹீரோவாக நடித்துவிட்ட நிலையில், நடிகர் சூரி எப்போது ஹீரோவாக நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார் சூரி.

போலீஸ் கதாபாத்திரம்

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை தழுவி இவர் நடிக்கும் விடுதலை திரைப்படம் இயக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

சாதனை படைக்கும் பாடல்

விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான “உன்னோடு நடந்தால்” என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார். இளையராஜா பாடல் சொல்லிக் கொடுக்க, தனுஷ் பாடியுள்ள பாடலின் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. நேற்று காலை வெளியான இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடல் இரண்டு மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here