நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் பிரத்தியேக சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

தொடர் வெற்றி

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து, படத்தின் வெற்றிக்கு உதவியது. மேலும் இவரது படங்கள் அனைத்தும் ஆக்ஷன் கலந்த காமெடி படங்களாகவே அமைந்தன. அதேபோல் ஜெயிலர் திரைப்படமும் ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படக்குழுவினர் சமீபகாலமாக ஜெயிலர் படத்தில் இணையும் ஒவ்வொரு பிரபலங்களின் விவரத்தையும் வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினர்.

வெளியான புகைப்படங்கள்

அண்ணாத்த படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டாக வெளிவந்திருப்பது பிரத்தியேக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள். கிட்டத்தட்ட இப்படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதுடன், இப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தையும் கூட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here