பாரதி கண்ணம்மா தொடர் சீசன் 2-வில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத்தே நடிக்க வேண்டுமென ரசிகர்கள் அன்பு கட்டளையிட்டு வருகின்றனர்.

இன்று முதல் ஒளிபரப்பு

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோவை அதிகாரபூர்வமாக வெளியிட்டது விஜய் டிவி. பாரதி கண்ணம்மா சீசன் 2 இல், பாரதி கதாபாத்திரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூரியன் நடிக்கிறார். பாரதி மட்டும் மாற்றப்பட்டுள்ள நிலையில், கண்ணம்மாவாக முதல் சீசniன் நடித்த வினுஷா தேவியே நடிக்கிறார். இன்று முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது.

அடம்பிடிக்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் பல தொடர்கள் சீசன் 2 வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த சீசன் 2 தொடரும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய சீசனின் ப்ரோமோ சமீபத்தில் விஜய் டிவியில் வெளியான பிறகு, ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அடுக்கி வருகின்றனர். புது ப்ரோமோ வெளியான இரண்டு நாட்களில் 2.4 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ளது. சமீபத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் தொடரின் நாயகி வினுஷா தேவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், எங்களுக்கு பாரதி என்றால் நினைவுக்கு வருவது அருண் பிரசாத் மட்டுமே என்றும் புதிய பாரதியாக அருண் வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here