நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது.

இளம் நடிகை

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். கொடி படத்திற்கு பிறகு, தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்த அனுபமா, தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் சைரன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.

கவர்ந்து இழுக்கும் ஸ்டைல்

அனுபமாவின் ஸ்டைலுக்கும், அவரது சுருட்டை முடிக்கும் பல ரசிகர்கள் உண்டு. அவரது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் போட்டோ சூட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார் அனுபமா. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பல ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எப்போதும் ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா, அதில் மாடர்ன் உடையில் காணப்படுகிறார். தங்க நிறத்தில் கிளிட்டரிங் வொர்க் செய்யப்பட்ட பிராக் உடன் அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படம், ஒரு மில்லியனுக்கு மேல் லைக்குகளை குவித்துள்ளது. ஹார்ட் இமோஜிகளையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here