பிரபல நடிகை தேவயானியின் மகள் சேலை கட்டியிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகை

1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. சரத்குமார், அஜித், விஜய், மம்முட்டி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக இருக்கின்றது. சூரியவம்சம், மறுமலர்ச்சி, சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தேவயானி. காதல் கோட்டை, சூரிய வம்சம், பாரதி போன்ற படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் பல தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை தேவயானி. கோலங்கள், ராசாத்தி போன்ற தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை ஆகும்.

அம்மாவை மிஞ்சிய அழகு

இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் இனியா, இளைய மகள் பிரியங்கா. அதில் மூத்த மகளான இனியாவிற்கு 17 வயதாகிறது. இனியா சேலை கட்டிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வலம் வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகில் தேவயானியை மிஞ்சிவிட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here