ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீதா ராமன் தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ரோஜா

சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ரோஜா தொடருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பது தான். ரோஜா தொடரில் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். அவர் நடிக்கும் புதிய தொடர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது . அந்த தொடரின் பெயர் சீதா ராமன்.

கவரும் ப்ரோமோ

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீதா ராமன் தொடருக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திருமண உடையில் வீட்டு வாசலில் கையில் மாலையுடன் தனியாக நிற்கும் மணப்பெண். மழையில் நனைகிறாள், குங்குமம் கரைகிறது. இதுவே இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஆகும். தொடரின் பெயர் ”சீதா ராமன்” என்பதால் இவர் தான் சீதா என்றும், ராமன் கதாபாத்திரத்தில் இவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்றும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலெட்டி இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த தொடர்கள்

ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும், மாரி, வித்யா நம்பர் 1, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்தது போல், பிரியங்கா நடித்துள்ள சீதா ராமன் தொடரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here