லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் பெயர் வெளியாகி உள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்

கைதி, மாஸ்டர், விக்ரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், திரிஷா இணைந்து நடிக்கும் தளபதி 67 இயக்குகிறார். இந்த படத்திற்கு “லியோ பிளடி ஸ்வீட்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தளபதி 67 டைட்டிலுக்காக காத்திருந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் படம் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்த படமும் அதிகளவில் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

மீண்டும் இணைந்த ஜோடி

விஜய்யுடன் 14 ஆண்டுகள் கழித்து திரிஷா நடிக்க இருப்பதால் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்திருக்கின்றனர். தளபதி 67 படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் துவங்கியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதற்காக சமீபத்தில் ஸ்பைஸ் ஜெட்டில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் பயணித்த முழு வீடியோவையே அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதில் திரிஷா மற்றும் விஜய் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றது.

“ப்ளடி ஸ்வீட்”

இந்த சூழ்நிலையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விக்ரம் படத்தில் நடித்த ஏஜென்ட் டினாவும் இந்த படத்தில் இணைத்துள்ளார் என்பது கூடுதல் சந்தோசமாக உள்ளது. ”லியோ பிளடி ஸ்வீட்” கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஸ்வீட்டாக இருக்கும் என்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்ற தகவல் கூடுதல் ஸ்வீட்டாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here