தனது திருமண வீடியோவுக்கான ப்ரோமோஷனை துவங்கி இருக்கிறார் பிரபல நடிகை ஹன்சிகா.

முன்னணி நடிகை

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

ஹன்சிகா திருமணம்

கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ Disney+ Hotstar-ல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பல மாதங்களாக இதை பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கான பிரமோஷன் வேலையை ஹன்சிகா மோத்வானி துவங்கியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்

சமீபத்தில் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ப்ரமோஷன் வேலையை துவங்கி உள்ளார் நடிகை ஹன்சிகா. போட்டோஷூட்டில் ஃப்ளோரல் டாப்லெஸ் ஃபிராக் (Floral topless frock ) அணிந்து, அவர் கொடுத்திருக்கும் க்யூட் எக்ஸ்பிரஷன் ஹன்சிகாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் நடிப்பில் ஏழு படங்கள் வரை ரிலீஸ் ஆக உள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் ஹன்சிகாவின் திருமண வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here