“தனி ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

திருமணம், குழந்தை என்று கமிட் ஆன பிறகு தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் கொடுக்கவில்லை. O2, கனெக்ட், கோல்ட், காட்ஃபாதர் என்று தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. அதனால் கவனமாக கதை கேட்கும் வேலையில் நயன் இறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

பிஸி

தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்திலும், இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இப்போது இந்த இரு படங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவதில் பிஸியாக இருக்கிறார்.

ஓகே சொன்னாரா?

நயன்தாரா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செய்தியை கேட்டவுடன், முன்னணி இயக்குநர்கள் நயன்தாராவிடம் கதை கூறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் இயக்கப் போகும் புதிய படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இயக்குநர் மோகன்ராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சுக்கள் நிலவி வருகின்றது.

2 ஆம் பாகம்

2015ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் உத்தமன், நாசர், தம்பி ராமையா போன்ற பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜெயம் ரவி நடிக்க போவதாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here