சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து நடிகை தர்ஷா குப்தா வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.

“ஓ மை கோஸ்ட்”

ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், நடிகர் சதீஷ், நடிகைகள் தர்ஷா குப்தா, சஞ்சனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இன்று வெளியான “ஓ மை கோஸ்ட்” திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்ன செய்தேன்

இந்நிலையில், சமீபத்தில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை தர்ஷா குப்தா, நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கிறார் என்று கேட்டு தேம்பி தேம்பி அழுதார். இதுகுறித்து தர்ஷா குப்தா கூறியதாவது, “நான் நடந்து வந்த போது என்னுடைய ஆடையை யாரோ மிதித்து விட்டார் என்று நான் திரும்பி பார்த்ததை என்னுடைய அசிஸ்டண்டை நான் திட்டியதாகவும் நான் திமிர் பிடித்தவள் என்பது போலவும் போட்டிருந்தார்கள். ஆனால் அது என் தம்பி தான் அவனுக்கு தெரியும் நான் அவனிடம் எப்படி பழகுகிறேன் என்று இது தெரியாமல் பேசுவது வருத்தமாக உள்ளது” என்று கூறினார். நடிகை தர்ஷா குப்தா அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here